Saturday, 27 August 2016

தர்மதுரை படக்குழுவினருக்கு டாக்டர்.குருசங்கரின் பாராட்டு

மதுரை, மீனாட்சி மிஷின் மருத்துவமனை மற்றும் தஞ்சை, மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.எஸ்.குருசங்கர் அவர்கள் சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள தர்மதுரை திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் டாக்டர். குருசங்கர் அவர்கள் கூறும்போது மருத்துவர்களின் உயர் நோக்கங்களையும், மருத்துவத்துறையின் உண்மைகளையும் இத்திரைப்படம் எடுத்துக்காட்டியது மட்டுமல்லாமல் கிராமங்களில் மருத்துவர்களின் தேவைகளையும், எடுத்துக்கூறும் விதமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இயக்குனர் சீனுராமசாமியின் ஒவ்வொரு படைப்பும் உயர்நெறிகளை கொண்டதாகவே உள்ளது. அதுபோல் தர்மதுரை திரைப்படம் மூலமாக ஒரு ஆசிரியர் எப்படி தனது மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதையும், மருத்துவம் பயின்ற மாணவர்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதைவிட இந்தியாவில் பணிபுரிதலின் முக்கியத்துவத்தையும் மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். கிராமத்திலும், கிராமம் சார்ந்த பகுதிகளிலும் மருத்துவர்களுக்கு கிடைக்கும் மதிப்பை எடுத்துக்கூறி கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மருத்துவர்கள் அங்கே வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக பதித்துள்ளார். மருத்துவரின் சொந்த விருப்பு வெறுப்புகளை தவிர்த்து பகையாளியாக இருந்தாலும் அவருக்கும் மருத்துவம் பார்த்து உயிரை காப்பாற்றக்கூடிய உயர்ந்த பணி மருத்துவ பணி என்பதையும் மிக தெளிவாக உணர்த்தியுள்ளார்.

இத்திரைப்படம் என்  போன்ற மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியும்  திரைத்துறை மேல் நம்பிக்கையும் வளர செய்துள்ளது. இந்த உண்மையான முயற்சிக்கு மருத்துவத்துறை சார்பாக தர்மதுரை படக்குழுவினருக்கு எனது ஆதரவையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எல்லா மருத்துவர்களும் , மருத்துவத்துறை மாணவர்களும் மற்றும்   செவிலியர்களும் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்.

விஜய் சேதுபதி வெளியிட்ட தமிழ் ராப் ஆல்பம் |

அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழ் ராப் ஆல்பத்தை வெளியிட்டுப் பாராட்டியுள்ளார். இசை தன் ராஜ்ஜிய எல்லைகளை .பல்வேறு வகைகளில் விரித்துக் கொண்டே செல்கிறது. அதில் உலகளாவிய ஒரு வடிவமே 'ராப்' என்பது. தமிழில் ராப் இசை குறைவாகவே உணரப்படுகிறது இக்குறையைப் போக்கும் வகையில் செயல்படுபவர்களில் ஒருவர்தான் 'ராப்' ராகேஷ்.பி.டெக் படித்த பொறியியல் பட்டதாரியான இவர் தமிழில் ராப் முயற்சியை முன்னெடுக்க முனைந்து வருகிறார். 

ராப் இசையை வெறும் கொண்டாட்ட இசையாகவோ கேளிக்கை வடிவாகவோ வெளிப்படுத்த விரும்பாத ராகேஷ், ராப்' இசையை வெறும் பொழுதுபோக்கு நோக்கில் பயன்படுத்த விரும்பாமல் பழுது நீக்கும் நோக்கில் பயன்படுத்த விரும்புகிறார். எனவே அதில் சமூக நோக்கு கொண்ட பாடலாக தருகிறார். தன் முதல் ஆல்பமான 'முன்னே வாடா . என்கிற வீடியோ ஆல்பத்தின் மூலம் ஊனமுற்ற இயலாத மாற்றுத்திறனாளிகள் பற்றிப் பாடி ஊக்கம் கொடுத்தார். அந்த வீடியோ ஆல்பத்தின் நேர்மையான நோக்கத்தை உணர்ந்து டிரம்ஸ் சிவமணி வெளியிட்டுப் பாராட்டி ஊக்கம் தந்திருக்கிறார்.. 

ராகேஷ் தனது அடுத்த வீடியோ ஆல்ப முயற்சியாக 12 AM என்கிற புதிய படைப்பைக் கொண்டு வந்திருக்கிறார். இதன் உட்பொருள் பெண்மை மதிக்கப்பட வேண்டும் பெண் களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
இதன் காட்சிகளையும் கருத்தையும் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி பிடித்துப் போய் இவ்வால்பத்தை தானே வெளியிட்டுப் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார். தமிழில் இண்டிபெண்டண்ட் ஆல்பம் இப்போது சமூக ஊடகங்களால் வரவேற்கப் படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் ராப் ராகேஷ். இதில் ராகேஷ் பாடல் வரிகளை எழுதி பாடி நடித்து தயாரித்தும் இருக்கிறார். இந்த ஆல்பம் டில்லி நிர்பயா.கேரள ஜஸ் வா,் சென்னை மகேஸ்வரி, சுவாதி போன்ற வன் கொடுமைக்கு ஆளான இந்தியப் பெண்களுக்குச் சமர்ப்பணம் என்கிறார் ராகேஷ்.

Friday, 26 August 2016

சாக்கோபார் – விமர்சனம்


ஆந்திராவில் ஒரு வீட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கிய ஐஸ்க்ரீம் படம் தான் தமிழில் ‘சாக்கோபார்’ ஆக டப் ஆகியிருக்கிறது.

வெறும் ரெண்டேகால் லட்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப்படம் சுமார் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அங்கு வசூல் செய்ததாம்.

சரி கதைக்கு வருவோம்…

ஸ்டடிக்காக தனக்கு சொந்தமான பங்களா ஒன்றுக்கு காதலன் நவ்தீப் உடன் வருகிறார் தேஜஸ்வி. வந்தவர் அவர் மட்டுமே அந்த பங்களாவில் தைரியமாக தங்குகிறார்.

மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருந்த அந்த பிரம்மாண்ட பங்களாவுக்கு இருட்டு பகல் என்றெல்லாம் இல்லை. எந்த நேரமும் ஏதாவது அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறது.

இதனால் பல இரவுகள் தூக்கத்தையும் தொலைத்து, பல பகல்கள் நிம்மதியையும் தொலைக்கிற தேஜஸ்வி அங்கு நடப்பது என்ன என்பதே தெரியாமல் குழம்பிப் போகிறார்.

கிளைமாக்ஸில் எல்லா செயல்களுக்கும் அவரே காரணம் என்பதாக முடிகிறது படம்!

ஒரு நாயகன், ஒரு நாயகி, வேலைக்காரப் பெண்மணி, அவளுடைய மகன், ஒரு ப்ளம்பர், ஒரு பீட்ஸா விற்க வருபவர், ஒரு கிளவி என ஆகக்குறைந்த எண்ணிக்கையிலான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு திகில் கூட்டை ஒரே ஒரு வீட்டுக்குள் கட்டியிருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

இந்த மாதிரியான திகில் படங்களெல்லாம் அவருக்கு கை வந்த கலை தான். ஆனால் நாயகியை திகில் படத்தில் முடிந்த வரை ஆடைகளை அவிழ்க்க வைத்து ரசிகர்களை ரசிக்க வைப்பதிலும் ஒரு புத்திசாலித்தனம் தெரிகிறது.

ஹீரோவாக வரும் நவ்தீப்புக்கு அவ்வளவாக படத்தில் வேலையில்லை என்றாலும் கிளைமாக்ஸில் பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.

நாயகியாக வரும் சந்தனக்கட்டை தேஜஸ்வி தான் படத்தின் தொண்ணூறு சதவீதக் காட்சிகளை ஆக்ரமித்திருக்கிறார்.

உள்ளாடைகளை அசால்ட்டாக அவிழ்ப்பது முதல் மாடிக்கும் வராண்டாவுக்கும் நடையாய் நடக்கிற போது அவருடைய முன்னழகும், பின்னழகும் திரையில் ரசிகர்களை கிறங்கடிப்பது நிச்சயம்.

ராம்கோபால்வர்மா தேஜஸ்வியை இயக்கியதை விட படத்தின் ஒளிப்பதிவாளர் அஞ்சி தான் முழுமையாக கையாண்டியிருக்கிறார். தேஜஸ்வியை ஓட விட்டு, நடக்க விட்டு, படுக்க விட்டு, குளிக்க விட்டு இப்படி பல ஆங்கிள்களில் ரகளையான கோணங்களில் ஒளிப்பதிவு செய்து ரசிகர்களின் ஏக்கத்தை போக்குகிறார்.

வேலைக்காரியாக வரும் சந்தீப்தி அளவாகப் பேசினாலும் அவர் கண்கள் ஆயிரம் வாட்ஸ் நடிப்பை அப்படியே வெளிப்படுத்துகிறது.

எத்தனை மார்க் போட்டாலும் அத்தனையும் ஆடை அவிழ்ப்பில் அலட்சியம் காட்டாத நாயகி தேஜஸ்விக்குத்தான் போய்ச்சேரும்.

பொதுவாகவே தன்னுடைய படங்களின் நாயகிகளை ரசிகர்கள் தூக்கத்தை தொலைக்கிற விதமாகத்தான் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பார் ராம்கோபால்வர்மா.

இதில் ஒருபடி மேலே போய் அதே லெவல் செலக்‌ஷனோடு கவர்ச்சியையும் வாரி இறைக்க வைத்திருக்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...