Friday, 8 April 2016

ஜெயம்கொண்டத்தில் போட்டியிடும் ஜெயம்கொண்டான்...


பாடலாசிரியர் ஜெயம்கொண்டான் சென்னை கே.கே.நகரில் கவிஞர் கிச்சன் என்ற ஓட்டலை நடத்திவருகிறார். 

சினிமாவில் பாடலாசிரியராகவும் இயங்கும் இவர் வரும் சட்டசபை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரின் நெருங்கிய நண்பரும், நடிகருக்கான கஞ்சா கருப்பு இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். 

இதுபற்றி ஜெயம்கொண்டான் கூறியதாவது ஜெயம்கொண்டம் என்ற என் தொகுதி மேல் கொண்ட அன்பால் என் பெயரை கூட ஜெயம்கொண்டான் என மாற்றிக்கொண்டேன். என் சொந்த தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கவிஞர்களில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முதல் வேட்பாளர் ஜெயம்கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...