Thursday, 16 June 2016

ஜூலை மாதத்தில் வெளிவருகிறது சுதிபின் முடிஞ்சா இவன புடி திரைப்படம்


ராம்பாபு புரோடெக்ஷன்ஸ் சார்பில் எம்.பி.ராம்பாபு தயாரிக்கும் திரைப்படம் “ முடிஞ்சா இவன புடி “ , கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் கதாநயாகனாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே “ நான் ஈ “ , “ புலி “ போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுதீப் நேரடியாக கதாநாயகனாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது.

இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து , தற்போது போஸ்ட் புரோடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாத இறுதியில் இப்படத்தின் பாடல்கள் வெளிவரும் , ஜூலை மாதத்தில் “ முடிஞ்சா இவன புடி “ திரைப்படத்தை வெளிக்கொண்டுவர வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தில் நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார் , “ போக்கிரி “ , “ பூஜை “ படங்களில் நடித்த முகேஷ் திவாரி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். “ எதிர் நீச்சல் “ , “ பாண்டிய நாடு “ படங்களில் நடித்த சரத் லோகித்சுவா மற்றொரு வில்லனாக நடிக்கிறார். நாசர் , சாய் ரவி , அச்சுதா குமார் , லதா ராவ் , சிக்கின்னா , சதீஷ் ,சது கோகிலா , கௌதமி , விச்சு , இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...