Thursday, 30 June 2016

நடிகர் ஷாமின் நன்றியும் எதிர்பார்ப்பும்!


நடிகர் ஷாம்,அர்ஜுன்,மணிஷா கொய்ராலா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ''ஒரு மெல்லியகோடு'. இப்படம் சில எதிர்பாராத காரணங்களால் வெளியாகவில்லை.பத்திரிகையாளர்கள் காட்சி எல்லாம் முடிந்தாலும் படம் வெளியாகவில்லை. இப்படம் ஜூலை முதல் தேதி வெளியாகிறது.


உற்சாகத்தில் இருக்கிறார் ஷாம்.அவர் பத்திரிகையாளர்கள் ,ஊடகங்ளுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''என் எல்லா தருணங்களிலும் உடன் இருக்கும் பத்திரிகை , தொலைக்காட்சி,இணையதள நண்பர்களுக்கு வணக்கம். நான் அர்ஜுன்,மணிஷா கொய்ராலா நடித்த ஒரு 'மெல்லியகோடு' படம் தவிர்க்க முடியாத காரணங்களால், வெளியாவதாக குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை.உங்களுக்கு படத்தைத்திரையிட்டும் காட்டினோம்.தாமதத்தை முன்னிட்டு விமர்சனம் அப்போதைக்கு எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.இதுவரை எழுதாததற்கு நன்றி. இப்போது படம் வெளியாவதால் தங்கள் மேலான விமர்சனத்தை எழுதி என்னையும் படக்குழுவினரையும் ஊக்கப்படுத்தி ஆதரிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். என்மேல் என்றும் அன்புகாட்டி என் எல்லா தருணங்களிலும் துணைநிற்கும் உங்களுக்கு மீண்டும் என் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.'' இப்படிக்கு ஷாம்.
இவ்வாறு ஷாம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...