Sunday, 12 June 2016

INDEPENDENCE DAY:RESURGENCE


1996 ஆம் ஆண்டு, பிரபல இயக்குநர், Roland Emmerich இன் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான science fiction படம்தான், Independence Day. 75 million America dollars செலவில் உருவாக்கப்பட்ட அந்த படம், 817 million America dollars வசூல் செய்து, 1996 இன் வசூல் மன்னனாக உலா வந்தது! வசூலை பொருத்த வரையில், அதுவரை வெளிவந்த படங்களிலேயே, 2வது பெரிய படமாக, இந்த காலகட்டம் வரை உயர்ந்து நின்றது! சுதந்திர தினம் என்கிற தலைப்பு கொண்ட இப்படம், Amercia சுதந்திர நாளான July 4 ஆம் தேதியன்று வெளிவந்தது, குறிப்பிடத்தக்கது! அந்நிய கிரகத்திலிருந்து கிளம்பி வந்த Aliens எனப்படுகிற எதிரிகள் கூட்டம், மனித குலத்தின் மீது தாக்குதல் நடத்த முற்பட, ஒன்று கூடி, ஒருங்கிணைந்த மனித குலம், July 4 ஆம் தேதி, எதிர் தாக்குதல் நடத்தி உலகினை, அந்த Aliens கையில் மனித குலம் சிக்காமல், போராட்டம் நடத்துவதுதான் இப்படத்தின் சாரம்.

சரியாக 20 ஆண்டுகளுக்கு பின்பு, அதே இயக்குநரான Roland Emmerich,June மாதத்தில் வெளியாகுமாறு, Independence Day: Resurgence என்கிற இந்த 2ஆம் பாகத்தை உருவாக்கி உள்ளார்.

Aliens தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தி, தற்காப்பு செய்துகொண்ட மனித குலம், மாமுல் வாழ்க்கைக்கு திரும்பி, 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. புதிய பலத்துடனும், அதிக எண்ணிக்கையில் ஆள் பலத்துடனும், தொழில் நுட்ப வளர்ச்சியின் மேன்மையை மைய்யாமாக வைத்து, மனித குலத்தின் மீது, மீண்டுமொருமுறை, அதிரடி தாக்குதல் நடத்த புறப்பட்டு வந்து விட்டன அந்த Aliens எதிரிகள்!

இம்முறை, அந்த Aliens எதிரிகள், புவி ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு Gravitational Machine ஐயும் கொண்டு வருகின்றன! 200 million America dollars செலவில் இப்படம் உருவாக பட்டுள்ளதாக செய்தி.

இந்த படத்தில் நடித்துள்ள Bill Pullman மற்றும் Jeff Goldblum ஆகிய இருவரும் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த Independence Day படத்திலும் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! மற்றும், Liam Hemsworth, Judd Hirsch போன்ற பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Harald Kloser மற்றும் Thomas Wankar ஆகிய இருவரும் இசை அமைத்துள்ளனர்.

Marcus Forderer ஒளிப்பதிவு செய்துள்ளார். Adam Wolfe படத்தை தொகுத்துள்ளார்.

இயக்குநர் Roland Emmerich, தனது திரைஉலக பயணத்தில் உருவாக்கிய முதல் Sequel(தொடர் படம்) என்பது குறிப்பிடத்தக்கது. Los Angeles, London, Dubai(Burj Khalifa) மற்றும் Singapore இல் உள்ள Marina Bay Sands என்கிற இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

2012 என்ற படத்தை Roland Emmerich உருவாக்கி வந்த நேரத்தில் தான், இந்த இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் அவருக்கு தோன்றியதாம்!

400-450 வரை Visual Effects Shots, Independence Day படத்தில் ஏதம் பெற்றன. இந்த படத்தில், 2000 Visual Effects Shots பயன்படுத்தப்பட்டன!

Fox Star Studio நிறுவனத்தின் உருவாக்கம், இந்த படம்.

Independence Day திரைப்படம், Best Visual Effects காக, Academy விருதை பெற்றது. Best Sound Mixing Award காக, பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

இப்பப்டம், அதனைவிட, அதிக எண்ணிக்கையில் விருதுகளை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...