Friday, 1 July 2016

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி

உப்பு கருவாடு படத்திற்கு பிறகு நடிகர் அருல்நிதியை இயக்குகிறார் ராதா மோகன். 

இப்படத்தை வஞ்சன் மூவீஸ் சார்பாக ஷான் சுதர்ஷன் அவர்கள் தயாகிக்கிறார், இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'சேதுபதி' படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் தயாராகி வரும் “எனக்கு வாய்த்த அடிமைகள்”திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக தானியா நடிக்கிறார், இவர் நடிகர் ரவிசந்திரனின் பேத்தி என்பது கூடுதல் தகவல்

இப்படத்தில் முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கிறார். 

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொள்ள,வசனம் பொன் பார்த்திபன் 

மற்ற நடிகர் நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...