Sunday, 25 December 2016

’பலே வெள்ளையத் தேவா’ திரைப்பட விமர்சனம்

அம்மா
 ரோஹினியின் டிரான்ஸ்பர் காரணமா சொந்த ஊரை விட்டு விட்டு, வேறு ஊருக்கு வரும் சசிகுமார், ஆதரவற்ற கோவை சரளா - சங்கிலி முருகன் தம்பதிக்கு ஆதரவாக இருக்க, அப்படியே அந்த ஊர் பெண்ணான ஹீரோயின் தான்யாவையும் காதலிக்கிறார்.

தான்யாவின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதலியை கைப்பிடிக்க போராடும் சசிகுமார், மறுபுறம் போலீஸ் கேஷ் மூலம் தனக்கு கிடைக்க இருந்த அரசு வேலையை காலி பண்ண வில்லனுக்கு எதிராக பிஸ்னஸ் தொடங்க, இறுதியில் இந்த இரண்டிலும் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.

புதுமுக ஹீரோயின், அறிமுக இயக்குநர், ஒரே விதமான கெட்டப், ஒரே விதமான கான்சப்ட் என்று இருந்த சசிகுமார், தற்போது ஒரே ஊரில் படப்பிடிப்பு என்ற நிலைக்கு வந்துவிட்டார். இவரைத் தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மட்டுமே புதிது, மற்றபடி படம் என்னவோ, சசிகுமாரின் முந்தையப் படங்களின் காப்பி போலத்தான் இருக்கிறது.

படமே ஜெராக்ஸ் காப்பியாக இருக்கும் போது நடிப்பில் மட்டும் மனிதர் என்னத்த மாற்றத்த காட்டப்போகிறார். அங்கேயும் இதே நிலை தான். அறிமுக நாயகி தான்யா, அவரது தாத்தா நடிகர் ரவிச்சந்திரனை தனது மூக்கு மூலம் நமக்கு ஞாபகப்படுத்துகிறார். கிரமாத்து வேடத்திற்கு ஏற்ற முகம்.

குறிப்பிட்ட இசையை மட்டுமே கொண்டு முழு படத்தின் பின்னணி இசையையும் முடித்துள்ள தர்புகா சிவாவின் இசையும், ரவிந்திரநாத் குருவின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப உள்ளது.

சசிகுமார் படம் என்றாலே, வரும் வில்லன்கள் கூட்டம் இந்த படத்தில் இல்லை என்பது சற்று ஆறுதலாக இருந்தாலும், படத்தில் இடம்பெற்ற வில்லன்களின் வேடம் ஒப்புக்கு ஜப்பானியாகவே உள்ளது. ரொம்பவே எதிர்ப்பார்க்கப்பட்ட கோவை சரளாவின் காட்சிகள் அனைத்தும் காலி டப்பாவாகவே உள்ளது. சங்கிலி முருகன் தனது வேலையை செய்துவிட்டு போகிறார்.

அறிவியல் தொழில்நுட்பம் பெருகி வரும் தற்போதைய காலக்கட்டத்தில், விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும், கிராமத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வருவதை, காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் சோலை பிரகாஷ், காமெடிக் காட்சிகளில் கோட்டை விட்டிருக்கிறார்.

சசிகுமார் படம் என்றாலே அருவா, ரத்தம் மஸ்ட் என்று இருப்பதால் அவற்றை தவிர்த்திருக்கும் இயக்குநர் வில்லன் கதாபாத்திரங்களையும் காமெடியன்களாக்கியுள்ளது சற்று ஆறுதல் அளித்தாலும், காமெடி காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...