Saturday, 31 December 2016

மோ - விமர்சனம்


சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவரும் பணம் சம்பாதிப்பதற்காக போலீஸிடம் சிக்காத அளவுக்கு ஏமாற்று வேலைகள் செய்து பிழைத்து வருகின்றனர்.

துணை நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், மேக்கப் மேன் முனிஸ்காந்த் இருவரையும் வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பேய் இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் செல்வாவை ஏமாற்றுகிறார்கள் சுரேஷ் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள். ஒரு கட்டத்தில் செல்வாவிடம் சுரேஷ் மாட்டிக்கொள்கிறார். பின் செல்வா, சுரேஷை வைத்தே பாலடைந்த ஒரு ஸ்கூலை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார். அதே ஸ்கூலை முன்னாள் எம்.எல்.ஏ. மைம் கோபியும் வாங்க நினைக்கிறார்.

மைம் கோபி எந்த சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அங்கு காத்து, கறுப்பு, பேய், பிசாசு இருக்கிறதா என்று மந்திரவாதியை வைத்துப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவார். அங்கு பேய் இருப்பதாக அவரை நம்பவைக்க வேண்டும் என்று வெற்றிவேல் திட்டமிடுகிறார். அந்தப் பொறுப்பை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கிறார். பேய் ஓட்டுதல் உள்ளிட்ட பல பித்தலாட்ட வேலைகளுக்குப் பேர் போன அவர்கள் பேய் நாட கத்தை அரங்கேற்ற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் போது எதிர்பாராத நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த நெருக்கடியும் அதன் விளைவுகளும் தான் ‘மோ’ சொல்லும் மீதிக் கதை.

முனீஸ்காந்தின் பேய் வடிவம், ஐஸ்வர்யா ராஜேஷின் பேய் பயமுறுத்தல்.. இவற்றுடன் தர்புகா சிவா மற்றும் மைம் கோபியின் நடிப்பு, ரமேஷ் திலக்கின் ஆரவாரமில்லாத ஆக்சன் இவற்றோடு படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை எல்லாமே சேர்ந்து இந்தப் பேய்ப் படத்தை பேயோடு சேர்ந்து ரசிக்க வைத்திருக்கிறது. மிரட்டும் சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையும், ஒலி வடிவமைப்பாளர் ஆனந்த் ஏற்படுத்தும் சிறப்பு ஒலி களும் படத்துக்குப் பெரும் பலம். திகில் படத்திற்கு தேவையான காட்சிகளை வைத்து சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...