Thursday, 26 January 2017

அதே கண்கள் – திரைவிமர்சனம்

கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா, பாலசரவணன் மற்றும் பலர் நடிப்பில் ஜிப்ரான் இசையில் ரோஹின் வெங்கடேசன் முகில் கதை வசனத்தில் மற்றும் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் அதேகண்கள்

நாயகன் கலையரசன் கண்பார்வையற்றவர். 15 வயது இருக்கும் போது ஏற்படும் காய்ச்சலில் பார்வை இழக்கிறார். கண்பார்வையற்ற கலையரசன் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். கலையின் தோழியாக வரும் ஜனனி ஐயர் ஒருகட்டத்தில் கலை மீது காதல் கொள்கிறார். எனினும் தனது காதலை கலையிடம் வெளிப்படுத்தாமல் தனுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, கலைக்கு ஷிவதா நாயரின் நட்பு கிடைக்கிறது. பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் தனக்கு உள்ள கடன் பிரச்சனை குறித்து கலையிடம் தெரிவிக்கிறார் ஷிவதா.

அப்போது, ஷிவதாவின் கடனை அடைப்பதாக கூறும் கலை தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். அதன்பிறகு, விபத்தில் சிக்கும் கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 3 வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் கலைக்கு கண்பார்வையும் கிடைக்கிறது.

பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் கலை ஷிவதாவை தேடுகிறார். ஷிவதா குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், ஜனனி ஐயருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்தநேரத்தில் கலையை பார்க்க வரும் ஷிவதாவின் தந்தை அவளை கடன் கொடுத்தவர்கள் கடத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்.

பின்னர் ஷிவதாவை காப்பாற்ற செல்லும் இடத்தில் ஷிவதாவின் தந்தை கொலை செய்யப்பட்டு, கொலைப்பழி சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் கலை வீட்டிலேயே தஞ்சமடைகிறார். அப்போது ஒருநாள் டிவியில் ஷிவதாவின் தந்தை விபத்தில் இறந்ததாக வரும் செய்தியை பார்க்கும் கலை, இந்த சம்பவம் குறித்த அறிந்துகொள்வதற்கு களத்தில் இறங்குகிறார். அவருக்கு துணைாக போலீஸ் அதிகாரியாக பாலசரவணன் வருகிறார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பர்களை கண்டுபிடித்து கலை ஷிவதாவை காப்பாற்றுகிறாரா, ஜனனி ஐயருடன் திருமணம் செய்கிறாரா என்பது படத்தின் சுவாரஸ்யமான த்ரில் கதை.

கலையரசன் முழு கதாநாயகனாக நடித்து இருக்கும் படம் அவர் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார் படத்தில் சிறுது நேரம் பார்வை இல்லாதவராக நடித்துள்ளார் அந்த காட்சிகளில் மிகவும் சிறப்பக செய்துள்ளார் என்று தான் சொல்லணும்.

ஜனனி ஐயர் பொதுவாகவே இவர் ஒரு நல்ல நடிகை தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பவர் அதே போல் இந்த படத்திலும் தன் பங்கை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் ஜீரோ படத்தில் நடித்த ஷிவதா எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பை மிகவும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் என்று தான் சொல்லணும் மிக சிறந்த நடிகை ஏன் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தெரியவில்லை இந்த படத்துக்கு மிக பெரிய பங்கு என்றால் அது ஷிவதா தான் என்று சொல்லணும் இதுவரை மிகவும் அமைதியாக நடித்த ஷிவதா இந்த படம் மூலம் ஆக்ரோஷத்தை வெளிபடுத்துள்ளர் சண்டை காட்சிகளில் அற்புதமாக சண்டை போட்டுள்ளார். சில இடங்களில் விஜயசாந்தியை நினைவு படுத்துகிறார் அந்த அளவுக்கு சிறந்த நடிப்பு என்று தான் சொல்லணும்.

கதைக்கு தேவையான இடத்தில் வரும் பாலசரவணன் அவரது நடிப்பிலும், காமெடியிலும் எப்போதும் போல கலக்கியிருக்கிறார்.

இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே படமாக்கியிருப்பது சிறப்பு. குறிப்பாக ஷிவதாவின் கதாபாத்திரத்திரத்தை மிரட்டலாக கொடுத்திருப்பது மிகச்சிறப்பு முதல் பகுதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அந்த காலத்து சூப்பர் படம் சூப்பர் டைட்டில் அதன் சிறப்பை சிதைக்காமல் படத்தை உருவாக்கி இருப்பது அருமை.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் காதிற்கு இனிமையான உள்ளது. படத்தின் பின்னணி இசை, குறிப்பாக ஷிவதா வரும் காட்சிகளில் பாடலோடு வரும் பின்னணி இசை அனைவரையும் கவரும்படி இருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...