Thursday, 5 January 2017

கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்.

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படுபவர் கவுதம் கார்த்திக். இவருடைய நடிப்பு இளம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து இருப்பது குறிப்பிட தக்கது. இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார் கதை எழுதி இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 


கதைக்கான களமும் ஒரு கதையின் ஓட்டத்துக்கு மிக முக்கியம். அந்த வகையில் கதைக்கான களமும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்ற வகையில் எழுதப்பட்டு நிற்கும் இந்த படத்தின் கதையை எழுதி இயக்குகிறார் ஆறுமுக குமார்.


"இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு கௌதம் கார்த்திக். அவர் ஒரு உற்சாக குவியல். ஒரு கலைஞராக அவர் என்னை மிகவும் கவர்ந்தவராவார்.அவருடைய வயதில் இருக்கும் மற்ற இளம் நடிகர்கள் மத்தியில் இவர் தனித்து விளங்குகின்றார் என்றால், அதற்கு முக்கிய காரணம், அவருடைய வேகம் , அதற்க்கு இணையாக இருக்கும் அவரது உற்சாகமும் தான்.


இந்த படத்தில் பிரபலமான மற்றொரு கதாநாயகனும் நடிக்க உள்ளார்; அவரை பற்றிய விவரங்களை சரியான நேரத்தில் தெரியப்படுத்துவோம். இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் ஒரு திரைப்படத்தில், கதைக்கேற்ற ஏனைய நடிகர் நடிகைகளை தேர்வு செய்வது சற்று சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாகவே செய்து முடித்திருக்கின்றோம். தற்போது எங்கள் படத்தின் கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒரு நல்ல நாளாக பார்த்து எங்கள் படத்தின் தலைப்பை அறிவிப்போம். வருகின்ற பெப்ரவரி மாதம் நாங்கள் எங்கள் படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றோம்." என்று உற்சாகமாக கூறுகிறார் அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...