Monday, 10 April 2017

நம்மால் நமக்காக சமூக சேவையின் 500 ஆவது நாளை

“நம்மால் நமக்காக” சமூக சேவையின் 500 ஆவது நாளை முன்னிட்டு “தமிழ் பாரம்பரிய கலைகள், கலைஞர்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வு திருவிழா” சென்னையில் ஏப்ரல் 2 ல் கொண்டாடப்பட்ட்து. இதில் சிறிப்பு விருந்தினராக திரு.பெரியய்யா IPS (IGP) , டாக்டர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர், ஸ்டண்ட் இயக்குனர், திரு.ரவிக்குமார் (IIS) Directorate of Advertising and visual publicity, டாக்டர் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ் (வர்மா ஆசான்) அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.


சிறப்பு விருந்தினர்கள் “தமிழ் பாரம்பரிய கலைகள், கலைஞர்கள், இயற்கை விவசாயம், மரங்களின் நன்மை, மரம் நடுதலுக்கான விழிப்புணர்வு மற்றும் இளைஞர்களுக்கான ஒழுக்கம் பற்றி வந்திருந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் சிறப்புரையாற்றி ஊக்கப்படுத்தினர், “நம்மால் நமக்காக” நிறுவனர் திரு.கௌரி சங்கர் ரவிச்சந்திரன் அவர்களையும் “நம்மால் நமக்காக” சென்னை தலைமை செயலாளர் திரு.முகில்மித்ரன் அவர்களையும் பாராட்டினர். இதில் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த, 500 நாட்களாக சேவை செய்த “நம்மால் நமக்காக” உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மரக்கன்று மற்றும் “நம்மால் நமக்காக” விருதுகள் வழங்கி பாராட்டினர்.




இதில் வந்திருந்த அனைத்து சிறப்பு விருந்தினருக்கும் மக்களுக்கும் மரக்கன்று மற்றும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
“என் தேசமே எழுந்துவா” என்ற “நம்மால் நமக்காக” கீதம் சிறப்பு விருந்தினர்களால் குறுந்தகடின் மூலம் வெளியிடப்பட்ட்து. “நம்மால் நமக்காக” பாடலின் இசையமைப்பாளர் திரு.D.M.உதயகுமார் மற்றும் கீதத்தின் பாடலாசிரியர் திரு.மொகமத் அலி ஜின்னா அவர்களுக்கு “நம்மால் நமக்காக” சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.



“உலகத்தமிழ் பாரம்பரிய காலடிக்குத்து விளையாட்டு சங்கத்தின்” நிறுவனர் ஆசான் த.கண்ணன் அவர்களும் மாணவர்களும் தமிழ் பாரம்பரிய வீரக்கலைகளான சிலம்பம், வர்ம்ம், செடிக்குச்சி, குத்துவரிசை, யோகா திறன்களை வெளிபடுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



ஸ்டண்ட் இயக்குனர் திரு.ஜாம்பவான் ஜாக்குவார் தங்கம், திடீரென்று ஆச்சரியமூட்டும் வகையில் நேரலையில் சிலம்பம், குத்து வரிசை செய்துகாட்டி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆள்த்தினார். பறை இசை கலைஞர்கள் மக்களை மிகவும் மகிழ்ச்சி கடலில் மூள்கடித்தனர்.


“ப்ரண்ட்ஸ் டாக்கீஸ் அவார்ட்ஸ் 2017” மூலம் சமூக விழிப்புணர்வு மற்றும் விவசாயம் சார்ந்த குறும்படங்கள் திரையிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறப்பு விருந்தினர்கள் நடிகர் விஜய் ஆண்டனியின் “சைத்தான்” திரைப்பட புகழ் இயக்குனர் திரு.பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, சூப்பர்ஸ்டார் திரு.ரஜினி காந்த் அவர்கள் டீசர் வெளியிட்ட விரைவில் வெளிவரவிருக்கும் ‘உரு’ திரைப்படத்தின் இயக்குனர், திரு. விக்கி ஆனந்த், குறும்படங்களை ரசித்து பாராட்டி திரைப்பட கலைஞர்களை ஊக்கப்படுத்தினர்.

“நம்மால் நமக்காக” குழு, தெய்வத்திரு “அன்னை தெரசா” திருவுருவப்படத்தை குழந்தைகள் மூலம், “அன்பை அடுத்த தலை முறைக்கு எடுத்துச்செல்ல”, திறந்துவைத்து, ப்ரண்ட்ஸ் டாக்கீஸ் ஸ்டுடியோ குழு திருவுருவடப்படத்தை பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மரக்கன்றுகளை நட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


“கபாலி” புகழ் நடிகர் திரு.கலையரசன், தன்ஷிகா மற்றும் நடிகர் திரு.டேனியல் போப், “நம்மால் நமக்காக” அமைப்பிற்கும் மாணவர்களுக்கும், நிறுவனர் திரு. கௌரி சங்கர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும், பாராட்டு தெரிவித்து காணொலி மூலம் மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...