Wednesday, 24 May 2017

தமிழ்நாட்டு ரசிகர்களின் இதயங்களை வென்ற சங்கிலி புங்கிலி கதவ தொற.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தமிழ்நாட்டில் தன் வெற்றிப் பயணத்தை சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் வெற்றியின் மூலமும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. வெளியான வார இறுதி நாட்களில் நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வார நாட்களிலும் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா, தம்பி ராமையா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதும் ரசிகர்களை படத்தை நோக்கி ஈர்த்திருக்கிறது.


கடந்த காலங்களிலும் எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, காக்கா முட்டை என பல அறிமுக இயக்குனர்களின் திறமையை மட்டுமே நம்பி, அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ். அந்த வரிசையில் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் ஐக் என்ற திறமையான ஒரு இயக்குனரை கண்டுபிடித்து தமிழ் திரையுலகிறகு கொடுத்திருக்கிறது. மீடியம் பட்ஜெட்டில் உருவான இந்த படம் முதல் மூன்று நாட்களிலேயே நல்ல வசூலை கொடுத்திருக்கிறது.


இது குறித்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சிஇஓ விஜய் சிங் கூறும்போது, "சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் வெற்றி எங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நல்ல புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து, சிறப்பான மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கம். இந்த படத்தில் மூலம் ஐக் மற்றும் அட்லீயுடன் இணைந்தது மகிழ்ச்சி" என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...