Friday, 10 November 2017

நெஞ்சில் துணிவிருந்தால் – திரைவிமர்சனம்

நட்புக்கும் காதலுக்கும் அதே நேரத்தில் பெற்றோர்களுக்கான முக்கியத்துவம் இவை அனைத்தும் சொல்லி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் எல்லோரும் நட்புகள் படம் நட்பை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் என்று பலர் நினைத்துள்ளனர் அனால் இயக்குனர் சுசீந்திரன் நட்பை வைத்து கொண்டு இன்று சமுதாயத்தில் நடக்கும் மிக பெரிய கொடுமையை சொல்லி இருக்கும் படம் தான் நெஞ்சி துணிவிருந்தால் படம் இன்றைய பண பலம் அரசியல் பலம் இருந்தால் என்னவேணும் என்றாலும் செய்யலாம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் படம்

இந்த படத்தில் நாயகனாக சந்தீப் அவருக்கு ஜோடியாக மெஹ்ரென் கவுர் பிர்ஸெடா இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த்,சூரி, அப்புக்குட்டி, ஹாரிஸ் உத்தமன்

இந்த கதைக்கு தேவையான கதாபாத்திரம் என்றால் இல்லை அதி விட அதிகமான பாத்திரங்கள் இருந்தும் அதை மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பெரிய நட்சித்திர பலம் அனால் தேவை படுகிறது படத்தில் எல்லாவிஷயங்களும் நல்ல்லதாக காண்பிக்கப்பட்டுள்ளது முதல் முறையாக நல்ல போலீஸ் அநியாயத்துக்கு துணை ஓபோகாத போலீஸ் நல்ல நட்பு நல்ல அம்மா செண்டிமெண்ட் இப்படி எல்லாமே பாஸிட்டிவாக காண்பித்துள்ளார். அப்பா எப்படி ஒரு விறு விருப்பு இருக்காதே என்று நினைக்காதீர்கள் நல்ல வில்லன் ஹாரிஸ் உத்தமன் அவரை வைத்து தான் கதை

நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

பின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். விக்ராந்த், சந்தீப்பின் தங்கையை சந்தீப்புக்கு தெரியாமல் காதலித்து

இந்நிலையில், பணத்திற்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன், விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதியில், ஹரிஷ் உத்தமனிடம் இருந்து விக்ராந்தும், சந்தீப்பின் தங்கையும் தப்பித்தார்களா? எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பு, காதல், சண்டை, என நடிப்பில் பளிச்சிடுகிறார். நட்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழுக்கு கிடைத்த சிறப்பான நடிகர் என்றே சொல்லலாம். மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ராந்தும், நட்பா, காதலா என விட்டுக்கொடுக்காத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரின் பார்ப்பதற்கு அழகாகவும், அளவான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமனின் கெட்டப் சூப்பர். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். சூரியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

சுசீந்திரனின் திரைக்கதைகள் எப்போதும் ஒரே சீராக பயணிக்கும். அந்த வகையில் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை இப்படத்தில் அமைத்திருக்கிறார். ஆனால், தவறான மருத்துவ சிகிச்சையில் ஆரம்பித்து, அடுத்து கந்துவட்டி, கடைசியில் மெடிக்கல் சீட்டு என திரைக்கதை தாவியிருக்கிறது. இந்த குழப்பமான திரைக்கதையால் எதுவுமே மனதில் நிற்காமல் போகிறது.

இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். லட்சுமணின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...