Monday, 14 January 2019

ரசிகர்களை கவரும் அருள்நிதியின் 'K13' மோஷன் போஸ்டர்

ஒரு நடிகரின் பெயர் ஏதாவது தலைப்புடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுமானால், அருள்நிதி 'கதைகளின்' நாயகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு கணிசமான பெயரை பெற்றிருக்கிறார். தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் ஸ்கிரிப்ட்களில் நடிக்கும் அவரது ஆர்வம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே அவருக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை உருவாக்கியுள்ளது. நிச்சயமாக, அவரது அடுத்த படமான 'K13' படமும் அருள்நிதியின் இன்னொரு முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்புகளை பார்வையாளர்களிடையே உருவாக்கியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் உடனடியாக அனைவரையும் கவர்ந்து, எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.


அருள்நிதியின் திரை பிரசன்னத்திற்கு சமமாக, 'வீடு' ஒன்றும் மோஷன் போஸ்டரில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது, இதற்கு முன்னர் வந்த போஸ்டர்களிலும் அது நிகழ்ந்தது. இதில் மொபைல், கதாபாத்திரங்களை தாங்கிய காகிதங்கள் அல்லது பச்சை நிற சுவர்கள், புகை, துப்பாக்கி சூடு மற்றும் ஒவ்வொரு விஷயமும் ஆழமாக சில விஷயங்களை பதிவு செய்கின்றன.


இயக்குனர் பரத் நீலகண்டன் கூறும்போது, "இந்த படத்தில் "K 13" என்பது குறிப்பது போல வீடு ஒன்று முக்கிய பின்னணியாக அமைந்துள்ளது. ரசிகர்கள் அதோடு ஒன்றிப்போக நாங்கள் தயார் செய்ய வேண்டியிருந்தது. இந்த மோஷன் போஸ்டருக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் அதற்கு தேவையான தீவிரத்தை கொடுத்த ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார், இசையமைப்பாளர் தர்புகா சிவா ஆகியோருக்கு தான் போய் சேரும்.


மேலும், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், எடிட்டர் ரூபன் மற்றும் சண்டைப்பயிற்சியாளர் டி. சுதேஷ் ஆகியோர் படத்தில் அதிக ஊக்கத்தை தந்திருக்கிறார்கள்.


அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள K13 திரில்லர் படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தப்ரியா தயாரித்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...