Saturday, 30 March 2019

டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கியிருக்கும் குப்பத்து ராஜா ஏப்ரல் 5ஆம் தேதி வெளிவருகிறது

அவரது நடனம் பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, புகழப்படுபவையாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர் ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார்.


சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மையில் சென்னை மாநகரத்தின் இயற்கையான கூறுகள் தான்" என்கிறார் இயக்குனர் பாபா பாஸ்கர்.


குப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் YouTubeல் லட்சக்கணக்கான ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த படம் ஒரு தனித்துவமான கதையை கொண்டுள்ளதும் தெளிவாகிறது. மேலும், 'குப்பத்து ராஜா' தலைப்புக்கு ஏற்றவாறு, டிரைலரில் வரும் சம்பவங்களை தொடர்புபடுத்தி பார்த்தால், இது குப்பத்துக்கு 'ராஜா' ஆக விரும்பும் இருவருக்கு இடையில் நடக்கும் மோதல் என்ற பார்வையை அளித்துள்ளது. எனவே பார்த்திபன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் சண்டை போடுகிறாரா? என பல கேள்விகள் உள்ளன. அதில் எதையாவது ஒன்றை சொன்னாலும் கதையை சொல்ல வேண்டிவரும்" என நகைச்சுவையாக கூறுகிறார் பாபா பாஸ்கர்.


மேலும் அவர் கூறும்போது, "டிரைலரில் நாம் பார்த்ததை விட ஆழமான கதை படத்தில் உள்ளது. கதையுடன் இணைந்து பொழுதுபோக்கு விஷயங்களும் இருக்கும். ஹீரோ மற்றும் வில்லன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், படத்தில் தான் அதை பார்க்க வேண்டும். ஏனெனில் அதில் சில வியக்கதகு தருணங்கள் இருக்கும்" என்றார்.


எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்துள்ள குப்பத்து ராஜா ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், பாலக் லால்வானி மற்றும் பார்த்திபன் ஆகியோருடன், யோகிபாபு மற்றும் பூனம் பஜ்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், பிரவீன் KL படத்தொகுப்பில் உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...