Friday, 24 March 2017

கடுகு திரைவிமர்சனம்


விஜய் மில்டன் படம் என்றால் எதாவது ஒரு நல்ல அம்சம் இருக்கும் என்று நம்பி போவார்கள் அப்படி நம்புவர்குக்கு நிச்சயம் ஏமாற்றம் இல்லாமல் கொடுத்துள்ள படம் என்று தான் சொல்லணும் முற்றிலும் வித்தியாசமான திரைகதை நாற்காலி நுனிக்கு வரும் கிளைமாக்ஸ் அது மட்டும் இல்லாமல் நம்மை யோசிக்கவைக்கும் கிளைமாக்ஸ் , படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் பொது நமக்குள் ஒரு நிம்மதி நிச்சயம் உணரலாம் இந்த படத்தில் .சரி வாங்க யார் நடித்து இருகிறார்கள் எப்படி நடித்து இருகிறார்கள் கதைக்கலாம் பார்க்கலாம் .

பரத் ,ராஜகுமாரன், A.வெங்கடேஷ், சுபிக்க்ஷா,ராதிகா பிரசித்ரா , தயா வெங்கட் , கீர்த்தி கோவை உமா , மற்றும் பல நடிப்பில் விஜய் மில்டன் கதை திரைகதை எழுதி இயக்கி உள்ளபடம் இந்த படத்தை அவரின் தம்பி பரத் ஸ்ரீனியுடன் சேர்ந்து தயாரித்துள்ளார் விஜய் மில்டன் , இந்த படத்தை முழு உரிமத்தை சூர்யா வாங்கி உலகம் முழுதும் ரிலீஸ் செய்துள்ளார் . சரிவாங்க கதைக்கலாம் பார்க்கலாம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமமான தரங்கம்பாடியில் கவுன்சிலராக இருந்து வருகிறார் நாயகன் பரத். இவர் அந்த கிராமத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர். இதனால், அந்த ஊரில் இவருக்கென்று ஒரு தனி மரியாதை இருக்கிறது. இந்நிலையில், அதேஊருக்கு மாற்றலாகி வரும் இன்ஸ்பெக்டரான வெங்கடேஷ், கூடவே தனக்கு சமையல்காரராக ராஜகுமாரானையும் அழைத்து வருகிறார்.

வந்த இடத்தில் டீச்சரான ராதிகா பிரசித்தாவுக்கும் ராஜகுமாரனுக்கும் நட்பு உருவாகிறது. ராதிகா பிரசித்தா உடன் இருக்கும் சிறுமியிடம் ராஜகுமாரன் ரொம்பவும் அன்புடன் இருக்கிறார். இந்நிலையில், அந்த தொகுதிக்கு அமைச்சர் ஒருவர் வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் பரத். அடுத்ததாக அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவிக்கு அந்த அமைச்சர்தான் பரத்தை பரிந்துரைக்கிறார்.

ஊருக்கு வரும் அமைச்சர் பள்ளியில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். அப்போது பள்ளி மாணவியான கீரித்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். இதை பார்க்கும் பரத், அவரால்தான் தனக்கு எம்.எல்.ஏ.பதவி கிடைக்கவிருக்கிறது என்பதால் அதை கண்டும் காணாததுமாக சென்றுவிடுகிறார். ஆனால், பிரசித்தாவோ அமைச்சரிடமிருந்து அந்த மாணவியை காப்பாற்றுகிறாள்.

இந்த விஷயம் பிரசித்தா மூலமாக ராஜகுமாரனுக்கு தெரிய வருகிறது. எந்தவிதத்திலும் அந்த பெண்ணுக்கு நீதி தேடிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் ராஜகுமாரன் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைக்கு அந்த அமைச்சரை எப்படி தண்டித்தார்? இதில் ராதிகா பிரசித்தா, பரத்தின் பங்கு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் பரத் மிடுக்கான ஊர் சேர்மன் வேடத்தில் நல்லது செய்யும் நயவஞ்சகனாக நடித்துள்ளார் என்று சொல்லவதை விட வாழ்ந்துள்ளார் பரத் மிக சிறப்பாக நடித்து இருக்கும் படம் என்று தான் சொல்லணும் முதலில் வில்லனாகவும் மீண்டும் திருந்தி வாழும் பாத்திரத்தில் மிக சிறப்பாக கச்சிதமாக நடித்துள்ளார். நிச்சயம் தமிழ் ரசிகர்கள் பரத்க்கு ஒரு நல்ல அங்கிகாரம் கொடுப்பார்கள் .

படத்தின் முதுகுஎலும்பு என்று சொன்னால் அது ராஜகுமாரனின் புலி பாண்டி கதாபாத்திரம் தான் என்று சொன்னால் மிகையாகது , இதுவரை அவரை ஒரு காமெடியனாக பார்த்த நமக்கு இதில் அவர் நடித்து இருக்கும் கதாபாத்திரம் நம் புருவத்தை உயர்த்த செய்யும் அந்த அளவுக்கு மிக சிறந்த நடிப்பு இவருக்குள் இப்படி ஒரு திறமையை கண்டுபிடித்த இயக்குனர் விஜய் மில்டனை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை அடேங்கப்பா நடிப்பில் உயந்து நிற்கிறார் காட்சிக்கு காட்சி கை தட்டல் வாங்குகிறார். பல நடிகர்கள் இவரிடம் இருந்து எந்த காட்சிக்கு எப்படி நடிக்கவேண்டும் என்பதை கற்றுகொள்ளவேண்டும் . அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் நம் எலோரையும் மிரட்டுகிறார்.

ராதிகா பிரசித்தா ஏற்கனவே நாம் இவரை குற்றம்கடிதல் படத்தில் இவரின் நடிப்பை பார்த்து விட்டோம் ஆனால் இதில் அதைவிட மிகசிறந்த நடிப்பு தன் கதாபாத்திரத்தை மிகவும் உணர்ந்து நடித்துள்ளார் , ராதிகா என்று பேர் இருந்தாலே மிக சிறந்த நடிகையாக இருப்பார்கள் போல ,

பள்ளி மாணவியாக வரும் கீர்த்தி, மற்றும் அவளுக்கு அம்மாவாக நடித்தவரும், போலீஸ் ஏட்டு, இன்ஸ்பெக்டர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அமைச்சராக வரும் தயா வெங்கட்டும் காமம் கலந்த அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக சமூகத்தில் நிலவி வரும் பாலியல் சீண்டல்கள் எந்த வயது பெண்களாக இருந்தாலும் அவர்களை தொடர்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்தாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால்தான் இந்தக் கொடூரங்கள் கொஞ்சமேனும் குறையும் என்பதை வலியுறுத்தும் படமாக இது அமைந்துள்ளது.

இந்த நேரத்துக்கு இந்த காலத்துக்கு தேவையான கருத்தை மிகவும் கமர்சியலாக நேர்த்தியாக விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் இயக்குனர் விஜய் மில்டன் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் என்று உயர்ந்து நிற்கிறார் .

படம் முழுவதும் ரொம்பவும் சீரியஸாக சொல்லமால் காமெடி காதல் அதேபோல நம் மூளையை சொறியவைக்கும் வசனங்கள் என்று மிகவும் திறம்பட கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய்மில்டன்.

அதேபோல், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது. கதை நடக்கும் கிராமத்தின் அழகை அவர் பதிவாக்கியிருக்கும் விதமும், ஒருசில காட்சிகளில் அவர் வைத்திருக்கும் கேமரா கோணமும் பார்ப்பவர்களை கதையோடு ஒன்றி பயணிக்க உதவியிருக்கிறது. சுப்ரீம் சுந்தரின் சண்டை காட்சிகளில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அருமையாக இருக்கிறது. அருணகிரியின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள்எதான் என்றாலும் அவை இரண்டும் முத்தானவை. முழுமையாக கேட்கும் அளவுக்கு இனிமையாக இருக்கிறது. கதையோடு ஒட்டியே பாடல்களும் நகர்வதால் ரசிக்கவே முடிகிறது. பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவு அமைத்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் கடுகு அனைவரும் பார்க்கவேண்டிய படம் Rank 4.5/5

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...