Friday, 31 March 2017

அட்டு – திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போது வடசென்னை தழுவிய படங்கள் வெளிவந்து வெற்றியை பெற்ற படங்களை தொடர்ந்து அட்டு என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.

ஒரே படத்தில் காதல் நட்பு அன்பு பாசம் வஞ்சம் துரோகம் என பல விஷயங்களை கையாண்டது புதுமை குறிப்பாக தமிழ் சினிமாவில் சென்னையை பற்றிய கதை என்பது மிக குறைவு அப்படியே எடுத்தாலும் அது வட சென்னை மக்களின் பதிவாக தான் இருக்கும் அது போல தான் இந்த படமும்.

ஆனால் இந்த படத்தின் பதிவில் பல விஷயங்களை மிக அருமையாக தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மேலே குறிப்பிட்டது போல நட்பு அழுத்தமான காதல் வஞ்சம் வஞ்சகம் துரோகம் இவை பற்றியே கதை களத்தை கையாண்ட விதம் அருமை மெல்லிய காதல் ஆபாசம் இல்லை ஆழமான நட்பு வித்தியாசமான துரோகம் அருமையான திரைகதை அதிலும் கிளைமாக்ஸ் காட்சி மிக அருமை என்று தான் சொல்லணும் .

இந்த படத்தில் முற்றிலும் புதிய நட்சத்திரங்கள் யோகி பாபு தவிர அறிமுக நாயகன் ரிஷி ரித்விக் அறிமுக நாயகி அர்ச்சனா ரவி யோகி பாபு தீனா பிரபா தாஸ் மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இசையமைப்பாளர் போபோ சசி ஒளிப்பதிவு ராமலிங்கம் இயக்கம் அறிமுக இயக்குனர் இரத்தின லிங்கா இவர்களின் கூட்டணி தான் அட்டு இந்த படத்தை ஸ்டுடியோ 9 சுரேஷ் வாங்கி உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளார்.

நாயகன் ரிஷி ரித்விக், யோகி பாபு உள்ளிட்ட 4 நண்பர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று குடும்பம் ஏதும் இல்லாததால், நண்பர்கள் 4 பேரும் வடசென்னையில் உள்ள குப்பமேட்டிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர். அதேநேரத்தில், அந்த பகுதியின் கவுன்சிலர் இவர்களுக்கு ஒருசில வேலைகளை கொடுக்கிறார். அதேபோல் பிரச்சனைகளில் சிக்கும் இவர்களை காப்பாற்றவும் செய்கிறார்.

நாயகியான அர்ச்சனா ரவியை அவளது பள்ளிப்பருவத்தில் நடந்த பிரச்சினையில் இருந்து ரிஷி காப்பாற்றியதால், அர்ச்சனாவுக்கு அவர்மீது காதல் வருகிறது. முதலில் அவளது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் ரிஷி, பின்னர் தனது நண்பர்களின் வற்புறுத்தலால் சம்மதம் தெரிவிக்கிறான்.

இந்நிலையில், போதைபொருள் விற்பனை செய்யும் கும்பல் ஒன்று, போலீசிடம் இருந்து தப்பிக்க குப்பைமேட்டில் போதைபொருட்களை வீசிச் செல்கிறது. இந்த போதைபொருட்கள் நாயகனான ரிஷியிடம் சிக்குகிறது. அவனிடம் போதை பொருள் சிக்கிக் கொண்ட அறிவும் அந்த கும்பல், அதை மீட்க ரிஷியை கொலை செய்ய முயற்சி செய்கிறது. அந்த முயற்சி தோல்வியடைந்ததால், ரிஷிக்கு ஆதரவாக இருக்கும் கவுன்சிலருக்கு பணம் கொடுத்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். இதிலிருந்து தப்பிக்கும் அட்டுவும் அவர்களது நண்பர்களும், கவுன்சிலர் செய்த துரோகத்திற்காக அவரை கொன்றுவிடுகிறார்கள்.

இதனால், போலீஸ் இவர்களை கைது செய்ய தேடிவருகிறது. இந்த கொலை பழியில் இருந்து தப்பிக்க வடசென்னையின் முக்கிய தாதாவிடம் ரிஷி மற்றும் அவரது நண்பர்கள் அடைக்கலமாகிறார்கள். அடைக்கலம் கொடுத்த அந்த தாதாவின் மகளை நண்பர்களில் ஒருவர் காதலித்து இழுத்து செல்கிறார். இதனால் கடும் கோபத்திற்குள்ளான தாதா அவர்களை என்ன செய்தார்? நண்பர்கள் 4 பேரும் என்ன ஆனார்கள்? ரிஷி, அர்ச்சனாவுடன் சேர்ந்தாரா? அர்ச்சனாவுக்கு என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகன் ரிஷி ரித்விக் அட்டு என்ற பாத்திரத்தில் வாழுந்து இருக்கிறார் என்று தான் சொல்லணும் ஒரு ரவுடியாக மிகவும் எதார்த்தமாக நடித்து இருக்கிறார். வட சென்னை வாலிபன் போலவே அவர் பேசும் தோற்றமும் செய்கையும் நடை உடை பாவனை எல்லாமே பொருந்தி இருக்கிறது தன் கதபாத்திரத்தை மிகவும் உணர்ந்து நடித்து இருக்கிறார் அதே போல காதல் காட்சிகளும் அலட்டி கொள்ளாமல் சிறப்பாக செய்துள்ளார் .

புதுமுக நாயகி அர்ச்சனா ரவி தமிழுக்கு கிடைத்த இன்னும் ஒரு சிறந்த நடிகை என்று சொல்லலாம் ஆனால் அழகு கொஞ்சம் கம்மி நடிப்பு ஜாஸ்தி இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும், தான் வரும் காட்சிகளில் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக அட்டுவுடனான காதல் காட்சிகளில் இவரது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.

யோகிபாபு மற்றும் அவரது நண்பர்கள் அனைவருமே வடசென்னை வாலிபர்களாக கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக யோகிபாபு ஒரு ரவுடியாகவும், காமெடியனாகவும் சிரிக்க வைக்கிறார். அதுதவிர கவுன்சிலர் கதாபாத்திரம் மற்றும் தாதா கதாபாத்திரத்தின் மூலம் வடசென்னை தாதாக்களையும், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் அறிய முடிகிறது.

இயக்குனர் இரத்தின லிங்கா நிச்சயம் பாராட்டவேண்டிய இயக்குனர் வட சென்னையை பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்கள் குறிப்பாக கடத்தல் விஷயம் ரௌடிகளின் வாழ்கை முறை கவுன்சிலர் போண்டர் தாதாகலின் பண்ணும் சில பல காரியங்கள் வெளிச்சம் போட்டு காண்பிதுள்ளார் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி மிகவும் நம்மை பிரமிக்கவைகிறது ஒரு தகப்பன் என்னதான் தன் பெண்ணாக இருந்தாலும் தவறான பாதையில் போனால் அதை தாங்கி கொள்ளமாட்டான் என்று மிகவும் அருமையான ஒரு பதிவு சபாஷ் இயக்குனர் .

படத்தின் மிக முக்கிய பலம் என்றால் அது படத்தின் இசையமைப்பாளர் போபோ சசி சென்னை வாசிக்கன கதை அதற்கு எற்ப இசை பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி குறிப்பாக கானா பாடல்கள் அருமை நாம் வட சென்னையில் வாழ்வதுபோலவே ஒரு பீல் கொடுத்துள்ளார் , அதே போல ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் கதைக்கு எற்ப அருமையான பதிவுகள் பாராட்டுகள் .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...