திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அதனை மீண்டும் ஒரு முறை உறுதி செய்யும் விதத்தில் உருவாகி இருக்கின்றது.
அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கத்தில், ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம். மே 19 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகும் இந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு கோடை விருந்தாக இருக்கும் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம்.
'A for Apple' நிறுவனத்தின் சார்பில் அட்லீ தயாரித்து, 'Fox Star Studios' வழங்க இருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை, வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று கமல் ஹாசன் வெளியிடுகிறார்.
0 comments:
Post a Comment