Tuesday, 11 July 2017

பாகுபலி நாயகன் பிரபாசுக்கு மேலும் ஒரு சிறப்பு அங்கீகாரம்.

சாஹு படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் இளைய தலைமுறை நாயகன் பாகுபலி புகழ் பிரபாசுக்கு ஒரு புதிய சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற இளம் நாயகன் இப்போது தேசிய நாயகனாக திகழ்கிறார் என்றால் மிகையில்லை. சமீபத்தில் GQ இதழ் வெளியிட்டுள்ள “அதிக செல்வாக்கு நிறைந்த இளம் இந்தியர்கள்” இன் தரவரிசைப் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்தப் பொன்னான தருணத்தில், பிரபாசை வாழ்த்தி மகிழ்கிறோம்.


இந்த இதழின் பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்ற பிரபலங்கள் பிவி சிந்து, டில்சித் டொசாஞ்ஜ், அலாக்ரிடா ஸ்ரீவஸ்தவா, கரண் கில், மனு சந்திரா, ராஜ் குமார் ராவ், பாட்ஷா, சஞ்சய் கார்க், ராதிகா ஆப்தே, மற்றும் நீரஜ் சோப்ரா.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...