Thursday, 29 March 2018

இந்தியத் திரைப்படம் ‘விஷ்வகுரு’ புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது!!

ஏவி ஏப்ரொடக்‌ஷன், உலகிலேயே மிக விரைவாக எடுக்கப்பட்ட ‘விஷ்வகுரு’ திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது.  கதை,  திரைக்கதை, வசனம் என எழுத்துப் பணிகள் முடிந்து ஷூட்டிங் முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணிநேரம் 2 நிமிடங்களில் முடித்து புதிய கின்னஸ் சாதனையைப் படத்திருக்கிறது ‘விஷ்வகுரு’.

சென்னை, 29மார்ச் 2018 –ஏவி ஏப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் டாக்டர். ஏ.வி.அனுப்தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் ‘விஷ்வகுரு’, இப்படத்தின் மூலம் ஏவி. அனுப் மற்றும் அப்படத்தின் இயக்குநர்திரு. விஜேஷ் மணி புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம் என  எழுத்துப் பணிகள் முடிந்து ஹூட்டிங் ஆரம்பித்த முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணிநேரம் 2 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள்.

இதனால் உலகிலேயே மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘விஷ்வகுரு’ படைத்திருக்கிறது ‘விஷ்வகுரு’ படமானது, இந்தியாவில் மாபெரும் சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரக் காரணமாக இருந்தவரும், கேரளாவில் மதம், ஜாதிகளை யெல்லாம் தாண்டி மாபெரும் சமூகச் சீர்திருத் தங்களை கொண்டுவந்து, ஆன்மீக சுதந்திரத்தையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்கிய ‘ஸ்ரீநாராயணகுரு’அவர்களின் வாழ்க்கையைக் காட்டும் ‘பயோபிக்’ [biopic] பிரிவிலான திரைப்படமாகும்.

இதற்கு முன்பு ‘மங்களகமனா’[MangalaGamana] என்ற இலங்கை திரைப்படம், 71 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்களில் எடுக்கப்பட்ட தேசாதனையாக இருந்தது. வெறும் 51 மணி நேரம் மற்றும் 2 நிமிடங்களில் ’விஷ்வகுரு’ எடுக்கப்பட்டிருப்பதால், உலகில் மிகவேகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது.

இப்படத்தின் எழுத்தாளர்ப்ரமோத் பையனூர் எழுத்துப் பணிகளை 27, டிசம்பர் 2017 அன்று முழுமையாக எழுதி முடித்த இரண்டு நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டு, அதாவது 29 டிசம்பர் 2017 அன்று திருவனந்த புரத்திலுள்ள ’நிலாதிரையங்கில்’ காலை 11.30 மணிக் குதிரையிடப்பட்டது. ‘விஷ்வகுரு’ திரைப்படத்தின் ஷூட்டிங் மட்டு டுமின்றி, படத்தலைப்பு முன்பதிவு, போஸ்ட்ப் ரொடக்‌ஷன் பணிகள், சுவரொட்டிகளுக்கான வடிவமைப்பு, விளம்பரங்கள் மற்றும் தணிக்கை முதல் அனைத்துப் பணிகளும் இந்த மிகக் குறைவான மணி நேரங்களுக்காகவே முடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ,வி,அனுப், மலையாள சினிமாவில் அதிகம் பணியாற்றிய அனுபவ முள்ளவர். முழுஅர்ப்பணிப்புடன் கூடிய மேடை நாடக நட்சத்திரம். இவர்‘விஷ்வகுரு’படம் பற்றி கூறுகையில், ‘’இந்திய சினிமாவை உலகளாவிய சினிமாவில் குறிப்பிட்டு காட்டும் வகையில் ஒரு மைல் கல்லை எட்டவேண்டுமென்ற எண்ணத்தில் உருவானது தான் இப்படம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மணிநேரத்தில், மேடை நாடக நட்சத்திரங்களின் பங்களிப்புடன் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். நாங்கள்  எதற்காக ஒருநல்ல முயற்சியுடன் இறங்கியிருக்கிறோம் என்பதை மக்கள் எப்படி புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்’’என்றார்.

இப்படத்தின் இயக்குநர் விஜேஷ் மணி கூறுகையில், ‘’நம் சினிமாவின் மீது உலகளாவிய ஒரு கவனஈர்ப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடே ’விஷ்வகுரு’. உலகளவில் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென நினைத்த போது, நட்சத்திரங்கள், திரைப்பட பணியாளர்கள் என அனைத்திலும் கைக் கொடுத்து அதைநிஜமாக்கிய ஏ.வி.அனுப் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள்’’என்றார்.

’விஷ்வகுரு’ திரைப்படத்தில் புருஷோத்த மன்கைனக்கரா, காந்தியன் சிவராமன், கலாதரன், கலா நிலையம் ராமச்சந்திரன், ஹரி கிருஷ்ணன், கே.பி.ஏ.சி. லீலாகிருஷ்ணன், பி.குரியன், ஷெஜின், பேபிபவித்ரா, மாஸ்டர் ஷரன் ஆகிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேக்கப் ஆர்டி ஸ்ட்பட்டனம் ரஷீத். கலை இயக்குநர் அர்கன். பின்னணி இசைகிளி மனூர்ராமவர்மா, படத் தொகுப்புலிபின். தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஷாகுல் ஹமீத். ஒளிப்பதிவு லோக நாதன் ஸ்ரீனிவாசன், இப்படத்தின் முக்கிய காட்சிகள் சிவகிரிமடத்திலும், அதற்கு அருகிலுள்ள முக்கிய இடங்களிலும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

’கின்னஸ் வேர்ல்ட்ரிக்கார்ஸ்’குறித்து…

‘கின்னஸ் வேர்ல்ட்ரிக்கார்ட்ஸ்’, உலகளவில் நிகழ்த்தப்படும் வரலாற்றை மாற்றியமைக்கும் சாதனைகளுக்கான வெற்றிகளுக்கான அங்கீகாரத்தை அளிக்கும் உலகளவிலான உச்ச அமைப்பாகதிகழ்கிறது. கின்னல் உலகசாதனைகள் உலகளாவிய நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் வருடத்திற்கு 750 மில்லியன் மக்களைச் சென்றடைகிறது. கின்னஸ் உலக சாதனைகளின் யூட்யூப்சேனல், 1.3 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் முன்னணி சேனலாகதிகழ்கிறது. இது வருடத்திற்கு 300 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. மேலும்கின்னஸ் உலகசாதனைகள் இணையதளமானது, வருடத்திற்கு 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களைப் பெற்றிருக்கிறது. இவை தவிர்த்து இதன் ஃபேஸ்புக் கணக்கிற்கு 12 மில்லியன் ரசிகர்களையும் கொண்டிருக்கிறது.

ஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ் குறித்து…

ஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ், கலை மீது தீவிரமான ஆர்வம் கொண்ட தயாரிப்பு நிறுவனமாகும். திரைப்படம் என்பது ஒரு கலை, அது நம் சமூகத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் சினிமாபல பரிமாணங்களில் தன்னுடைய நல்ல பங்களிப்பை சமூகத்திற்கு அளித்துவருகிறது என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகதிகழ்கிறது. 2007-ல் தனது திரைப்பட பயணத்தை ஆரம்பித்த ஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ், திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும் படங்களை விநியோகம் செய்திருக்கிறது. ஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ் தனது செயல்பாடுகளால் வளர்ச்சிக் கண்டதுடன், உலகளாவியச் சந்தையில் தன் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் வகையில்பல ஆங்கிலப்படங்களின் வெளியீடுகளை மேற்கொண்டிருக்கிறது. சமூகத்திற்கு பொழுதுப் போக்குடன், அத்தியாவசியமான செய்தியையும்கலந்து, மூத்த நட்சத்திரக் கலைஞர்கள் மற்றும் சாதிக்கத்துடுக்கும் இளையதலை முறையினருடனும் கைக் கோர்த்து திரைப்படங்களை அளிப்பதில் ஆர்வத்துடன் களமிறங்கியிருக்கிறது. ஏவி ஏப் ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த பல திரைப்படங்கள், ஃபெஸ்டிவல்டிகான்ஸ் போன்ற சர்வதேச விருதுகளையும், தேசிய திரைப்பட விருது, கேரள மாநில அரசின்  திரைப்பட விருதுகள், ராமுகரியத் விருது, விஜய் விருது என பல விருதுகளையும் பெற்றிருக்கும் தயாரிப்பு நிறுவனமாகும்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...