“ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது “ சாம்பியன் “ என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் G.K. ரெட்டி துவக்கிவைத்தார். இதில் நடிகர் , நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். G.K. ரெட்டி , அஞ்சாதே நரேன் , R.K. சுரேஷ் , ஜெயபிரகாஷ் , ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
அரோல் குரோலி இசையில் , சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார்.
களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் K.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.

0 comments:
Post a Comment