திரைப்படத்தை வெளியிட முழுவீச்சில் இயங்கி வரும் தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி, "ஆர்.கே.நகரின் தலைப்பாக இருக்கட்டும் அல்லது டிரைலராக இருக்கட்டும், ரசிகர்கள் சிறப்பான ஆதரவையும், பாராட்டுக்களையும் கொடுத்திருக்கிறார்கள். இத்தகைய படங்களை முயற்சிக்கும் போது அதற்கு தூணாக இருப்பது ரசிகர்கள் மட்டும் தான். இந்த நம்பிக்கையுடன், மொத்த குழுவும் இந்த படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறோம். இயக்குனர் சரவணராஜன் தனது சிறந்த முயற்சியால் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். வைபவ் எமோஷன் மற்றும் நகைச்சுவை கலந்த தனது இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக, அவரது இயல்பான நடிப்பு அவரது பாத்திரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும். மறுபுறம், சம்பத்தின் கதாபாத்திரமும், திரை ஆளுமையும் படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும்.
சனா அல்தாஃப், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் டி. சிவா என ஒரு நட்சத்திர பட்டாளமே ஆர்.கே.நகர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
கங்கை அமரன், பொன்ராஜ் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருக்கிறார். கல்யாண் நடனம் அமைத்திருக்கிறார்.
பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் வி.ராஜலட்சுமி உடன் இணைந்து ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment