அனிருத் மற்றும் விவேக் மெர்வின் ஒன்றாக இந்த படத்துக்கு இசையமைப்பது மிகப்பெரிய பலமாக இருக்கும். வெற்றி பாடல்களை தொடர்ந்து கொடுக்கும் இந்த இரண்டு இசையமைப்பாளர்களும் ஒரே படத்திற்கு இசையமைப்பது நமக்கு கற்பனைக்கெட்டாத உற்சாகத்தை அளிக்கிறது. புதுமுகங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை நரேன் இளன் கையாள்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடன் உதவியாளாராக இருந்தவர். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களாக கலைவாணன் (எடிட்டர்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்ஸ்), ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் AR (வசனம்), வாசுகி பாஸ்கர் & பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு), டி உதயகுமார் (ஆடியோகிராஃபி) ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
வில்லவன் கோத்தாய் ஜி (விஎஃப்எக்ஸ் கிரியேட்டிவ் டைரக்டர்), ஸ்ரீ ரங்கராஜ் ஜே (விஎஃப்எக்ஸ் இயக்குநர்) மற்றும் சந்திரமோகன் ஜே (விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளர்) என விரிவுபடுத்தப்பட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் குழு மேலும் உற்சாகமளிக்கிறது.
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP சார்பில் கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2018ல் துவங்க இருக்கிறது.
0 comments:
Post a Comment