Monday, 17 September 2018

முதுபெரும் நடிகை சத்யப்ரியா அவர்களுக்கு முனைவர் பட்டம்

பள்ளி குழந்தைகளிடையே ஒரு பொதுப்படைத்தன்மை இருக்கும் – தான் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்று. பெரும்பாலான மாணவர்களுக்கு அது ஒர் மிக பெரிய கனவாகவே இருக்கும். ஆனால் தலைசிறந்த நடிகையான சத்யப்ரியாவுக்கோ… பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி முதன்மை மாணவராய் வந்து, மருத்துவ துறையில் சேர தகுதியுடன் இருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக சத்யப்ரியா அக்கனவை தூக்கி எறிய வேண்டியதாயிற்று. ஏனெனில் குடும்பச்சூழலில் அவருக்கு கிழே 3 தம்பிகளும் தங்கையும் இருந்தனர். அன்றும் சரி, இன்றும் சரி, பல கனவுகள் சில காரணங்களால் நனவாகாமலேயே போகின்றன. ஆனால் சில நேரங்களில் வாழ்க்கை நாம் கண்ட கனவை வேற வழியில் நனவாக்கும். தற்போது இங்கிலாந்தை சேர்ந்த AUGP (Academy of Universal Global Peace) சத்யப்ரியா அவர்களுக்கு முனைவர் பட்டம் அளித்து கெளரவித்துள்ளது.


தனக்கு அளிக்கப்பட்ட முனைவர் பட்டத்தை குறித்து நடிகை சத்யப்ரியா கூறுகையில், “நான் மருத்துவத்துறை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்பதே என் அம்மாவின் விருப்பம். இப்போது நான் பெரும் மகிழ்ச்சியில் இந்த முனைவர் பட்டத்தை பெற்று கொள்கிறேன்!”
1972 முதல் நடிகையாகவும், திரைத்துறையில் ஓர் அங்கமாக, 45 ஆண்டுகளாய் 300 படங்கள் நடித்துள்ள சத்யப்ரியா கூறுவதாவது,
”இந்த முனைவர் பட்டத்தால் கெளரவிக்கப்பட்ட நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திரைத்துறையில் இதுவரை நான் என் குடும்பத்திற்க்காக உழைத்தேன். இப்போது என் வாரிசுகள் எல்லோரும் நல்ல நிலையில் உள்ளதால், சமுதாயத்திற்கு என்னால் இயன்றதை செய்ய விழைகிறேன். இந்த கெளரவ பட்டம் என்னை சமுதாயத்தின் மேம்படுத்தலை நோக்கி கொண்டு செல்கிறது.”
பன்முக திறன் கொண்ட நடிகை சத்யப்ரியா, ஒப்பற்ற தன் திறமையால் பாராட்டுக்குரிய பல கதாபாத்திரங்களின் வழி தென்னிந்திய திரைப்படங்களில் பயணித்ததோடு நில்லாமல், சீரியல்கள் வழி தமிழ் மக்களின் உள்ளங்களிலும் குடியேறியிருக்கிறார்.
அவரது மகன், MS பட்டம் பெற்று அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனமொன்றில் பணிப்புரிந்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் வாழும் கட்டிட கலைஞரான அவரது மகள், இந்திய நிறுவனமொன்றிற்கு ஆன்-லைன் மூலம் பணிப்புரிந்து கொண்டிருக்கிறார். இருவரும் தங்கள் குடும்பங்களுடன் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இங்கிலாந்து AUGP – Academy of Universal Global Peace என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரான மது கிருஷ்ணன், உலகெங்கிலும் உள்ள திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முனைவர் பட்டமளித்து கெளரவித்து வருகிறார். கலைத்துறையில் நடிகை சத்யப்ரியாவின் பங்களிப்பை பாராட்டும் விதமாக அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


இன, மொழி, சாதிய பாகுபாடுகளை களைந்து, உலக அமைதி நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது AUGP நிறுவனம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...