Friday, 15 October 2021

வெனோம் 2 படத்தின் விமர்சனம்

Director - Andy Serkis

Cast - Tom hardy (venom) , Woody Harrelson(Carnage) , Amber Sienna (Heroin), Naomie Harris 

ஹீரோ டாம் ஹார்டி ரிப்போர்ட்டராக பணிபுரிந்த நிலையில் அவரின் செய்தியால் ஒரு சீரியல் கில்லராக இருக்கும்  வில்லன் வூடிக்கு  மரண தண்டனை கிடைக்கிறது. 

டாம் ஹார்டி உடலுக்குள் வெனம்  இருக்கும் நிலையில். தன் கடைசி ஆசையாக வில்லன், டாம் ஹார்டியை சந்திக்க அழைக்க சிறைக்கு செல்லும் டாமிற்கும் வில்லனுக்கும் மோதல் ஏற்பட சீரியல் கில்லர் டாமின் கையை கடித்து விடுகிறார்.

அங்கிருந்து வெளியே வரும் டாமிற்கும் வெனோமிற்கும் வாய் சண்டை நடக்கிறது, இதனால் அவரின் உடலை விட்டு வெனோம்  வெளியே சென்று விடுகிறது. அதன்பின் வில்லன் டாமின் கையை கடித்து இரத்தம் சுவைத்த வில்லனுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நேரத்தில் கார்னேஜ் என்னும் வேறொரு வெனோமாக மாறி அனைவரையும் கொல்கிறார். 

வில்லனை கட்டுப்படுத்த தன் முன்னால் காதலியின் உதவியை டாம் நாடுகிறார். வெனோமை அழைத்து கொண்டு வரும் முன்னால் காதலி, டாமின் உடலுக்குள் செல்ல உதவுகிறார். டாமும், வெனோமும் சேர்ந்து வில்லனான சீரியல் கில்லரை கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் டாம் ஹார்டி, வில்லனாக வரும் வூடி ஹாரெல்சன் ஆகியோரின் ஆக்ரோஷமான நடிப்பும், வெனமின் கிராபிக்ஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாகவும், ஆச்சர்யமாகவும் வடிவமைக்கப்பட்டு அசத்தியுள்ளனர்.

கார்னேஜ் மற்றும் வெனோம் தோற்றமும் இறுதி மோதலும் சிறந்த தொழில்நுட்பம் நிறைந்த ஆக்ஷன் காட்சிகளுக்கு உத்தரவாதம்.

வில்லனின் காதலியாக நவோமி ஹாரிஸ், டாமின் எக்ஸாக மிச்சல் வில்லியம்ஸ் நடிப்பு அற்புதம்.

2018ல் வெளியான வெனோமின் தொடர்ச்சியாக இந்த வெனோம் 2 ஆக்ஷன் பிரியர்களுக்கு செம விருந்து படைக்கும். இப்படம் விறுவிறுப்புக்கும், வித்தியாசத்திலும் மிரட்சியை ஏற்படுத்திடும். திரைக்கதையிலும், காட்சிபடுத்துதலிலும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆண்டி செர்கிஸ்.

மொத்தத்தில் வெனோம் 2 ஆக்ஷன் பிரியர்களுக்கு செம்ம விருந்து 

Rating 3/5

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...