நடிகர்கள் : ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கெளதம் மேனன், தம்பி ராமையா, ராதாரவி, கோபி மற்றும் பலர்
இசை : ஜுபின்
ஒளிப்பதிவு : பரூக் ஜே.பாட்ஷா
இயக்கம் : மோகன்.ஜி
தயாரிப்பு : மோகன்.ஜி, 7ஜி சிவா
நேர்மையான போலீஸ் அதிகாரி ரிச்சர்ட்டை பழிவாங்கும் வில்லன் கோஷ்ட்டி, அதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி, அவரை சாதிவெறிப்பிடித்த கொலைகாரராக அடையாளப்படுத்துகிறார்கள். இந்த சூழ்ச்சியில் சிக்கி சிறைக்கு செல்லும் ரிச்சர்ட், தனக்கு நடந்த சதி திட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை அறிந்து அவர்களை வேட்டையாடுவது தான் ‘ருத்ர தாண்டவம்’.
போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் ரிச்சர்ட், நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்.
ரிச்சர்ட்டின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷா குப்தா, கொடுத்த வேலை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனனின் நடிப்பும், அவருடைய வேடமும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
தம்பி ராமையா, ராதாரவி, கோபி, ராம்ஸ் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவு படத்தை தரமானதாக காட்டியுள்ளது. ஜுபினின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. கலை இயக்குநரின் பணியும் பாராட்டும்படி உள்ளது.
ஏற்கனவே பலர் அரைத்த மாவில், மதம் மாற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் இயக்குநர் மோகன்.ஜி.
விறுவிறுப்பான திரைக்கதை, சுவாரஸ்யம் குறைவான காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, படம் முழுவதும் தனது வியாபார உள்நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மொத்தத்தில், ‘ருத்ர தாண்டவம்’ ok
0 comments:
Post a Comment