Sunday, 31 October 2021

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகை வாணி போஜன்


 “உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் பல குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இன்று நடந்த இந்நிகழ்வில் நடிகை வாணி போஜன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.


நிகழ்வில் நடிகை வாணி போஜன் பேசியபோது, “இன்று இந்த குழுந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். மேலும் “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு  எனது வாழ்த்துக்கள்” என்றார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...