Tuesday, 14 March 2023

ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லிட்டில் மெர்மெய்ட்’

 


டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ டிரெய்லர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது!

 

ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


அனிமேட்டட் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷனான டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் நட்சத்திரங்களான ஹாலே பெய்லி மற்றும் மெலிசா மெக்கார்த்தி இருவரும் 95வது ஆண்டு அகாடமி விருதுகளின், ஏபிசியின் நேரடி ஒளிபரப்பில் இன்று காலை இதன் ட்ரைய்லரை வெளியிட்டுள்ளனர். தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குநரான ராப் மார்ஷல் இயக்கியுள்ள ’தி லிட்டில் மெர்மெய்ட்’, மே 26, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.



’தி லிட்டில் மெர்மெய்ட்’ என்பது சாகச தாகம் கொண்ட, அழகான மற்றும் உற்சாகமான இளம் தேவதையான ஏரியலின் கதை. கிங் ட்ரைட்டனின் மகள்களில் இவள் இளையவள் மற்றும் மிகவும் தைரியமானவள். கடலுக்கு அப்பாற்பட்ட உலகத்தைப் பற்றி மேலும் அறிய ஏரியல் ஏங்குகிறாள். அந்த சமயத்தில், நிலப்பரப்பில் வசிக்கும் இளவரசர் எரிக்கை சந்திக்கும்போது அவனிடம் காதல் வசப்படுகிறாள். தேவதைகள், மனிதர்களுடன் தொடர்பு கொள்வது அங்கு தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஏரியல் தனது மனதைப் பறிக்கொடுக்கிறாள். அவள்  கடல் சூனியக்காரி உர்சுலாவுடன் ஒப்பந்தம் செய்து நிலத்தில் வாழக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறாள். ஆனால், இறுதியில் இது அவளுடைய வாழ்க்கையையும், அவளுடைய தந்தையின் கிரீடத்தையும் ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது.


பாடகியும் நடிகையுமான ஹாலே பெய்லி படத்தில்  ஏரியலாக நடிக்கிறார். ஜோனா ஹவுர்-கிங் இளவரசர் எரிக்காகவும், ’டோனி விருது’ வென்ற டேவிட் டிக்ஸ் (’ஹாமில்டன்’)  செபாஸ்டியனாகவும் வருகின்றனர். Awkwafina (’ராயா மற்றும் லாஸ்ட் டிராகன்’) ஸ்கட்டிலின், ஜேக்கப் ட்ரெம்ப்ளே (’லூகா’) ஃப்ளவுண்டரினாகவும், நோமா டுமேஸ்வேனி (’மேரி பாபின்ஸ் ரிட்டர்ன்ஸ்’) ராணி செலினாவாகவும் வருகின்றனர். ஆர்ட் மாலிக் (’ஹோம்லேண்ட்’), சர் கிரிம்ஸ்பியாகவும், ஆஸ்கார் விருது வென்ற ஜேவியர் பார்டெமுடன் (’நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’) கிங் ட்ரைட்டனாக;வும், உர்சுலாவாக இரண்டு முறை அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மெலிசா மெக்கார்த்தியும் நடிக்கின்றனர்.


டிஸ்னி இந்தியா ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ 26 மே 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...